முடக்கப்பட்டது த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு

முடக்கப்பட்டது த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு

21 October 2018 04:04 am

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை ரசிகர்களிடம் பிடித்துள்ள நடிகை த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு, இன்று (சனிக்கிழமை) அதிகாலை மர்ம நபர்கள் அடங்கிய குழுவொன்றினால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் த்ரிஷாவும் இவ்விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நண்பர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, “மர்ம குழுவொன்று த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கில் ஊடுருவி தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் அவரது கணக்கில் இருந்து தவறான வீடியோக்களையும், செய்திகளையும் அனுப்பியுள்ளமையை கண்டறிந்தோம்.

அதனைத் தொடர்ந்து கணக்கின் இரகசிய இலக்கங்களை மாற்றி விட்டு இவ்விடயம் தொடர்பாக அறிவிப்பை திரிஷா வெளியிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

திரிஷாவின் டுவிட்டர் கணக்கு ஏற்கனவே ஒரு முறை இதேபோன்று கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.