தந்தை ஒருவர் தனது மகளின் உதட்டில் முத்தம் கொடுப்பது சரியா? தவறா?

தந்தை ஒருவர் தனது மகளின் உதட்டில் முத்தம் கொடுப்பது சரியா? தவறா?

30 November 2018 06:02 am

தங்க மீன்கள் திரைப்படத்தில் இயக்குனர் ராம் எழுதிய அழகான வரிகள் "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று. முத்தம் என்பது காதலன், காதலி , கணவன், மனைவி என்பதையும் தாண்டி அனைத்து உறவுகளுக்கும் சொந்தமான பொதுவான ஒரு பாசப்பகிர்வு.

கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்றவற்றின் மூலமே பாசத்தை அதிகம் காண்பிக்க முடியும். இங்கிலாந்து , கால்பந்தாட்ட அணியின் முன்னாள்த் தலைவர், டேவிட் பெக்கம், தன் மகளுக்கு கொடுத்த முத்தம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி, ஒரு விவாத பொருளாகவே மாறி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்தவர் டேவிட் பெக்கம். இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் கடந்து போனாலும், மறக்க முடியாத வீரர்களில் இவரும் ஒருவர். இவருக்கு நான்கு குழந்தைகள். தனது இன்ஸ்டாகிராமில் , தன் 7 வயது மகளுக்கு இதழ் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதற்குத் தான் எங்கள் சமூகம் தாறுமாறான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் யார் என்ன கூறினாலும் ,எனக்குக் கவலை இல்லை. ஒரு தந்தை, குழந்தைக்கு இதழ் முத்தம் கொடுப்பது முற்றிலும் தவறான காரியம். இதழுக்கு பதிலாக கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கலாம்" இதழில் குழந்தைக்கு முத்தம் கொடுப்பது இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது. இப்படிப் பல கருத்துக்கள் எதிராக வந்து குவிந்துள்ளன.

மறுபுறம் ஆதரவாக, "இதில் என்ன தவறு இருக்கிறது நான் எப்போதுமே என் குழந்தைக்கு இதழில் முத்தம் இடுவேன். நான் மட்டுமல்ல, என் பெற்றோரும் எனக்கு இதழில் முத்தம் கொடுத்திருக்கின்றனர்.

இது இயற்கை இது ஒன்றும் தவறில்லை ..முத்தம் அன்பின் வெளிப்பாடு டேவிட் பெக்கம் கொடுத்த முத்தம் ஒன்றும் இச்சை வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்றும் கூறி ஆதரவு தெரிவித்திருந்தனர். அது மட்டுமின்றி, பல அப்பாக்கள், அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதழ் முத்தமிட்ட படங்கள் மற்றும் இதற்காக இதழ் முத்தமிட்டு எடுத்த படங்களை பகிரத் தொடங்கியுள்ளனர். எதற்கெல்லாம் பிரச்சனையை உருவாக்குவது எனத் தெரியாமல் இந்த உலகம் சுழல்கிறது... அப்பா... ஒரு நிமிஷம் தல சுத்திரிச்சு