ரவி மீண்டும் அமைச்சராவதை தடுக்கும் சந்திரிக்கா! - Lanka News Web (LNW)

ரவி மீண்டும் அமைச்சராவதை தடுக்கும் சந்திரிக்கா!

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு மீண்டும் நிதி அமைச்சு பதவி வழங்குவதை தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ரவி கருணாநாயக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அதனை அவர் தொடர்ந்து செய்வார் என்று தெரிந்தே குறித்த மூவரும் அவருக்கு எதிர்ப்பு வௌியிட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை பரிந்துரை செய்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எனவும் அவரின் பணிப்பில் மனோ தித்தவெல்ல, தேசால் டி மெல் ஆகியோர் நிதி அமைச்சை வழிநடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

ரவி கருணாநாயக்க அமைச்சராகுவதற்கு தடையாக உள்ள மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறித்து கூறவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இவர் அலரிமாளிகையில் நடக்கும் அனைத்து பொருளாதார நிபுணத்துவ கூட்டங்களிலும் பங்குகொள்வார்.

மனித உரிமை பாதுகாப்பு செயற்பாட்டாளராக பணியாற்றும் ராதிகா குமாரசுவாமி இவரது சகோதரி என்பதால் அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திரஜித் குமாரசுவாமியை மஹிந்த தனக்கு நெருக்கமாக வைத்திருந்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் மலிக் சமரவிக்ரமவே இந்திரஜித் குமாரசுவாமியை பிரதமர் ரணிலுக்கு நெருக்கமானவராக அறிமுகப்படுத்தினார். பிணைமுறி மோசடியில் அர்ஜுன மகேந்தரன் சிக்கிய பின் சந்திரிக்கா, மலிக் இருவரும் இணைந்து இந்திரஜித்தை மத்திய வங்கி ஆளுநராக்க முயற்சித்து வென்றனர்.

இதேவேளை, மத்திய வங்கியின் தற்போதைய நிலைமை குறித்து அதன் தொழிற்சங்கங்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளன. இந்திரஜித் குமாரசுவாமியுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியில் செயற்பாடுகளை குழப்பி நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சித்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

திரிஷாவின் திருமணம்

மார்ச் 23, 2019

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் திரிஷா கிருஷ்ணன்.

வரவு செலவு திட்டத்தில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாமை வேதனைக்குரியது

மார்ச் 23, 2019

இவ்வருட வரவு செலவு திட்டத்தில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாமை வேதனைக்குரியது என...

மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

மார்ச் 23, 2019

மலையக இளைஞர் யுவதிகளுக்கு தபால் திணைக்களத்தில் வேலைவாய்பு பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெப்பநிலை- எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் அதிகரிப்பு

மார்ச் 23, 2019

வெப்பம் காரணமாக அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வானிலை...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

நடுவீதியில் பெண்ணை இழிவுபடுத்திய கலகா இளைஞன் கைது

மார்ச் 20, 2019

கடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம்...

அபிவிருத்திகளை அலட்சியபடுத்தியவர்கள் இன்று அடைக்கலமானது ஏன்- அங்கஜன்

மார்ச் 17, 2019

அபிவிருத்திகளை அலட்சியபடுத்தியவர்கள் இன்று அடைக்கலமானது ஏன் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்னேறிய இலங்கை

மார்ச் 21, 2019

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இவ்வருடம் 130 ஆவது இடத்தில் உள்ளது.

6 மாதங்களில் கிளிநொச்சி மைதானம் சுகததாச போன்று மாறும் – அமைச்சர் உறுதி

மார்ச் 18, 2019

6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள்...