UNP கட்சியில் மீண்டும் ஜோன்ஸ்டன்?

UNP கட்சியில் மீண்டும் ஜோன்ஸ்டன்?

13 August 2018 09:05 am

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ​ஜோன் பெனாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் செயற்குழுவில் பேசப்படும் விடயங்கள் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியவருவதாகவும் அதற்கு ஜோன்சன் பெனாண்டோ காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவருடன் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தொடர்பு வைத்திருப்பதாக தெரியவருகிறது. இரவு நேரங்களில் ஜோன்ஸ்டன் குறித்த அமைச்சரை சந்திப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

இனிமேலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இருக்க முடியாது எனவும் சந்தர்ப்பம் வரும்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வதாகவும் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிரபல அமைச்சரிடம் கூறியுள்ளார்.

ஆனால் தன்மீது மஹிந்த ராஜபக்ஷவிற்கு சந்தேகம் வராம அளவிற்கு நடந்துகொள்ள ஜோன்ஸ்டன் முயற்சித்து வருகிறார். ஆனாலும் மஹிந்த, நாமலுக்கு ஜோன்ஸ்டனின் இருவேடம் தெரியும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி கூறியுள்ளது.

அதனால் விரைவில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மேடையில் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு எதிர்கருத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.