மஹிந்தவை விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு

மஹிந்தவை விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு

14 August 2018 08:42 am

எதிர்வரும் வௌ்ளிக்கிமை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் கையொப்பத்தில் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு கீத் நொயருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் தவறியதால் இரண்டு அதிகாரிகள் சென்று அவுஸ்திரேலியா கான்பரேவில் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மஹிந்த ஆட்சி காலத்தில் அனைத்து ஊடகவியலாளர் கடத்தல் கொலை சம்பவங்களும் ஒரே குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.