முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வீட்டு வேலைகளுக்கு கடற்படை சிப்பாய்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வீட்டு வேலைகளுக்கு கடற்படை சிப்பாய்

15 August 2018 02:49 pm

ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன எட்டியாராச்சி, கடற்படையினர் செலவில், கடற்படை சிப்பாய் இருவரை தனது பணிகளுக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கருணாசேன எட்டியாராச்சி, பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய போது, கடற்படைக்கு வழங்க ஒத்துழைப்பிற்கு நன்றிக் கடனாக இந்த இரண்டு சிப்பாய்களையும் வேலைக்கு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த இரண்டு சிப்பாய்களும் ஜேர்மனியில் உள்ள கருணாசேன எட்டியாராச்சியின் வீட்டில் வேலை செய்து வருவதாக தெரியவருகிறது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சு அறிந்திருந்த போதிலும், கருணாசேன எட்டியாராச்சியின் இந்த அலட்சியம் குறித்து பாதுகாப்பு அமைச்சு தலையீடு செய்யவில்லையெனத் தெரியவருகிறது.

2009ஆம் ஆண்டு 11இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டச் சம்பவம் குறித்து கடற்படையினர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், கருணாசேன எட்டியாராச்சி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, இந்த குற்றச்சாட்டுக்களை மறைக்க முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதற்குப் பிரதி உபகாரமாக கடற்படையின் இரண்டு சிப்பாய்களை, அவருக்கு உதவியாளராக வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.