'ஜனபலய'வில் மதுபோதையில் தவித்த 81 பேர் வைத்தியசாலையில்

'ஜனபலய'வில் மதுபோதையில் தவித்த 81 பேர் வைத்தியசாலையில்

6 September 2018 02:57 am

கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது மது போதையில் இருந்த 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஜனபலய போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டகாரர்கள் இவ்வாறு மதுபோதையில் வீதிகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவர்களில் 81 பேர் வரையில், இந்தியா வழங்கிய அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில், அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.