முப்படைகளின் பிரதானி நாடு திரும்பினார்

முப்படைகளின் பிரதானி நாடு திரும்பினார்

20 September 2018 05:03 pm

முப்படைகளின் பிரதம அலுவலர் (சீப் ஓப் டிபென்ஸ் ஸ்டாப்) அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்றையதினம் நாடு திரும்பியுள்ளார். 2008-2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 தமிழ் வாலிபர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக குற்றப்புலனாய்வு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 10ம் திகதி அவர் குற்றப்புலனாய்வு பொலிஸ் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று மெக்சிக்கோ பயணப்பட்டிருந்தார்.

அந்நாட்டின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள அரசாங்கம் அவரை அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதால் அவரிடம் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குற்றப்புலனாய்வு பொலிசார் அறிவித்துள்ளனர்.