ரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்!
Wednesday, 27 May 2020

ரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்!

12 December 2018 04:42 pm

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போத ஜனாதிபதி தனது இணக்கத்தை வௌியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை இன்றி இரண்டு தடவைகளுக்கு மேல் பாராளுன்றில் தோல்வி கண்டமை மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றில் ஆதரவு உள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறித்தும் இங்கு பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒக்டோபர் 26ம் திகதிக்கு முன்னர் நாட்டின் சட்டரீதியான பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க மீது தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இருப்பதால் அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என குறித்த சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, 'நான் கூறியது உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் கேட்பது ரணில் என்றால் இனி நான் நியமிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கோரி நம்பிக்கை பிரேரணை இன்று (12) பாராளுமன்றில் 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.