திலக், சுவாமி ஆகியோரும் அமைச்சுப் பதவி வேண்டாம் என்றனர்!

திலக், சுவாமி ஆகியோரும் அமைச்சுப் பதவி வேண்டாம் என்றனர்!

19 December 2018 03:58 am

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.எம்.சுவாமிநாதன் மற்றும் திலக் மாரப்பன ஆகியோர் அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சுயாதீனமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ரணிலின் கோரிக்கையை ஏற்று மனோ கணேசன், ரிசாத் பதியூர்தீன், மலிக் சமரவிக்ரம ஆகியோர் அமைச்சுப் பதவி வேண்டாம் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.