ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தை மூடிவிட்டு வௌிநாடு பறந்த மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தை மூடிவிட்டு வௌிநாடு பறந்த மைத்திரி

26 December 2018 10:25 am

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் இழுத்துமூடப்பட்டுள்ளது.

சு.கவின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிலங்கையின் பிரதான இரு அரசியல் கட்சிகளுள் ஒன்றாக விளங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இன்று மூன்றாம்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சிதலைமை சென்றபிறகே இப்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. மூன்றுக்கும் மேற்பட்ட அணிகள் உதயமாகியுள்ளன. கட்சியை மீட்டெடுப்பதற்காக சந்திரிக்கா அம்மையாரும் களமிறங்கியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கட்சி தலைமையகம் மூடப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பில் சு.க. தரப்பிலிருந்து இன்னும் உத்தியோகப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.