இலங்கை ஹெரோயின் தேசமாக மாறுகிறதா?

இலங்கை ஹெரோயின் தேசமாக மாறுகிறதா?

1 January 2019 06:58 am

தெஹிவளையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையே இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான ஹெரோயின் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை ஒரு தொகை ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து 278 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த ஹெரோயின் 3,336 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளையில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதிக்கூடிய பெறுமதி மிக்க ஹெரோய்ன் தொகை இதுவாகும் என்று தெரிவித்ததோடு, குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, குறித்த நபர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக, ​தெஹிவளை பகுதியில் இப்பாரியளவிலான ஹெரோய்ன் தொகை வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட நிலையில், குறித்த வீடே வெகுநாள்களாக ஹெரோய்ன் போதைப் பொருள் விநியோகத்துக்கான மத்திய கேந்திர நிலையமாக விளங்கிவந்ததாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் சஜ்சீவ மெத்தேவத்த எவ்வித பிரபல்யமும் தேடாமல் ஊடக விளம்பரம் இன்றி போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் முன்னாள் அதிகாரி நியோமல் ரங்கஜீவ தொடர்ந்தும் இத்திட்டங்களுக்கு உரிமை கோரி வருகிறார். முகநூல் மூலம் அவர் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.