இவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டம்

இவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டம்

3 January 2019 05:49 am

இந்த ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு திருத்தசட்டம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்றத்தின் அமர்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அந்த திருத்த சட்டத்திற்கான பாராளுமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ளமுடியாமல் போனது.

அரசியல் யாப்புக்கு அமைவாக புதிய ஒதுக்கீட்டு திருத்த சட்டத்தை மீண்டும் சமர்ப்பிப்பதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் 2019ஆம் ஆண்டில் முதல் 4 மாதக்காலப் பகுதிக்கென அரசாங்கத்தின் செலவை உள்ளடக்கியவகையில் இடைக்கால கணக்குஅறிக்கை 2018 டிசம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றையதினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைவாக இடைக்கால கணக்கறிக்கை மூலம் உள்ளடக்கிய அடுத்த 2019ஆம் ஆண்டின் முதல் 4 மாதக்காலத்திற்கான செலவுகளை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டுக்கான புதிய ஒதுக்கீட்டு திருத்தசட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவு திட்டம் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் நிதி ஒருங்கிணைப்பு வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் மற்றும் 2021ஆம் ஆண்டளவில் முன்னெடுப்பதற்கு திட்மிடப்பட்டுள்ள கீழ் கண்ட மத்தியகால அரச நிதி இலக்கை அடையும் வகையில் ஒழுங்குபடுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்களசமரவீர சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)