ஜொனிக்கு சி.ஐ.டிக்கு அழைப்பு

ஜொனிக்கு சி.ஐ.டிக்கு அழைப்பு

19 January 2019 09:26 am

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் கொண்டுவரப்பட்டது. அதற்கமைய குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் அறிக்கைகள், வீடியோக்கள், பேச்சுவார்த்தை தகவல்கள் தமக்கு கிடைப்பதாக தெரிவித்தமை குறித்து தொடர் விசாரணைகள் நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இதுகுறித்து விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் CID செயற்பாடுகளில் தலையீடு செய்வதில்லை எனவும், CID அறிக்கைகளை இதுவரை ஜனாதிபதி கேட்டது இல்லை எனவும், அவ்வாறு கோரப் போவதில்லை எனவும் தெரியவருகிறது. இந்த நிலைமையின் கீழ் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்து ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் போலி அறிவிப்பு என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து CID விசாரணைகள் நடக்கவுள்ளதாகவும், இதற்காக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.