விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான குறுந் திரைப்பட போட்டி - Lanka News Web (LNW)

விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான குறுந் திரைப்பட போட்டி

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான குறுந் திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது.

ஜனநாயகம், மக்கள் மேலாண்மை, சர்வஜன வாக்குரிமை போன்றவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலே இது நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான ஊடகவியளாளர் மாநாடு அரசாங்க திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த குறுந் திரைப்பட போட்டியை களனி பல்கலைக்கழகமும் கல்வியமைச்சும் இணைந்து நடத்துகின்றன.

பாடசாலைகள் பிரிவு, பகிரங்க பிரிவு என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் மும்மொழிகளிலும் படைப்புக்களை சமர்ப்பிக்க முடியும்.

ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாத குறுந் திரைப்படங்களை மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டும்.

அனைத்து தயாரிப்புகளும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அல்லது களனி பல்கலைகழகத்தின் வெகுஜன தொடர்பாடல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

பகீரங்கப் போட்டிப் பிரிவில் முதலாவது இடத்துக்கு தெரிவாகும் குறுந்திரைப்படத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு ஒரு லட்சம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 75 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் போட்டியில் முதலாம் இடத்துக்கு தெரிவாகும் குறுந் திரைப்படத்துக்கு 50 ஆயிரமும் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 30 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 20 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் படைப்புகளுக்கு பணப்பரிசில் வழங்கப்படுவதுடன்,ஜனநாயகம், மக்கள் மேலாண்மை, சர்வஜன வாக்குரிமை போன்றவை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கருத்தரங்கு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 15ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை 22 கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியளாளர் மாநாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களான ஜனாதிபதி சட்டதரணி நலின் அபேசேகர பேராசிரியர் ரத்ண ஜீவன் ஹூல் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ, களணி பல்கலைக்கழகத்தின் விஷேட விரிவுரையாளர்களான அருண லோகு இயன மற்றும் தர்ஷன சோமரத்ண உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb