இரத்கம கொலை : பொலிஸ் அதிகாரியின் பணி விசாரணைகளுக்கு தடையாக இருக்கும் - Lanka News Web (LNW)

இரத்கம கொலை : பொலிஸ் அதிகாரியின் பணி விசாரணைகளுக்கு தடையாக இருக்கும்

ரத்கம பூஸ்ஸ பிரதேசத்தில் வர்த்தகர் இருவர் கடத்தி, தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதில் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தென் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேவர்தனவின் கீழ் இயங்கிய விசேட விசாரணை பிரிவில் உள்ள அதிகாரிகள் சிலர் மீதே இந்த சம்பவம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவர் மூலம் இந்த கொலைச் சம்பவம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேவர்தனவிற்கு பொலிஸ் தலைமையத்திற்கு மட்டும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  குறித்த அதிகாரியிடம் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லையென பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதி பொலிஸ்மா அதிபர் என்பவர், பொலிஸ்மா அதிபர் என்ற உயர் நிலைக்கு இரண்டாவது அதிகாரம் படைத்த அதிகாரியாவார். இவ்வாறான அதிகாரியொருவரால் பொலிஸ் துறையில் எல்லாவிதமான தாக்கத்தையும் செலுத்த முடியும். எனவே, நடந்துள்ள ரத்கம கொலைச் சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்துவரும் நிலையில், இந்த விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தையும் குறித்த பொலிஸ்மா அதிபர் பெற்றுள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனவே, ரத்கம வர்த்தகர் இருவர் கொலை குறித்த விசாரணைகள் தங்கு, தடையின்றி நடக்க குறித்த அதிகாரியின் தலையீடு இருக்கக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb