சட்டமா அதிபரே, இதுபோன்ற நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வருமா?

சட்டமா அதிபரே, இதுபோன்ற நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வருமா?

5 April 2019 03:56 am
இந்தியப் பிரஜையொருவர் 2009 - 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வந்து, இலங்கையர் ஒருவருடன் இணைந்து தேசிய நீர்வளங்கள், வடிகாலமைப்புச் சபையின் வேலைத் திட்டமொன்றில் முதலீடு செய்துள்ளார். விவேக் சர்மா என்ற இந்திய இந்தப் பிரஜை, 100,000 அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளார்.

இதன்பின்னர், இந்த வேலைத் திட்டத்தின் இலங்கையின் பங்காளார், இந்திய பிரஜைக்கு பணம் வழங்காது ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து இந்திய பிரஜை 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை அழைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்த ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தற்போது ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், சட்டமா அதிபர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதுகுறித்து வழக்காட அரசாங்கத்தின் சட்டத்தரணியொருவரைக்கூட நியமிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

இந்த நிலையில், இந்திய பிரஜையன விவேக் சர்மா, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்கு வந்து, நீதி கோரி அங்கும், இங்கு அழைத்து திரிந்து வருகிறார். எனினும், இதுவரை ஆக்கபூர்வமான எவ்வித நகர்வையும் அவரால் முன்னெடுக்க முடியவில்லை. இவர் இந்திய வர்த்தக வலையப்பில் சிறந்த தொடர்புகளைக் கொண்ட வர்த்தகர் என அறியப்படுகிறது.

இதுகுறித்து லங்கா நியூஸ் வெப், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு கேட்டது. எனினும், தரவுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மூன்றாம் தரப்பொன்றுக்கு இதுகுறித்த தகவல்களை தன்னால் வழங்கவோ, இதுகுறித்து பேசவோ தனக்கு அதிகாரம் இல்லையென எம்முடன் கதைத்த அந்த குறிப்பிட்டார். இதனை எமது ஆசிரியர் பீடம் ஏற்றுக்கொண்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளின் கோப்புகள், கூரையளவிற்கு உயர்ந்துள்ளதையும், இவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான வளங்களோ, அதிகாரிகளோ சட்டமா அதிபர் திணைக்களத்தில் என்ற நியாயத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும், இது வெளிநாட்டு முதலீட்டாளர் குறித்த பிரச்சினை. இலங்கையை பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக் கொள்ள, வெளிநாட்டு முதலீடுகளை அதிகமாக ஈர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளருக்கு பாதிப்போ, அநீதியோ இழைக்கப்படும் போது அதுகுறித்த சட்டநடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். முதலீட்டாளர் ஒருவர் பாதிக்கப்பட்டு, நீதியைத் தேடி சுமார் 7 வருடங்களுக்கு மேலாக அலைந்து திரிவது இலங்கையில் முதலீடு செய்யவரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பிழையான முன்னுதாரணமாகும். இவ்வாறான விடயங்கள் இலங்கையின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமடையக்கூடும்.

இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்த வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் துரிதப்படுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
- VAK