ஜெப்ரி அலோசியஸ், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட 5 பேருக்கு பிணை

ஜெப்ரி அலோசியஸ், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட 5 பேருக்கு பிணை

6 April 2019 03:50 am
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி உட்பட 5 பேரை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அவர்களை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

இதேவேளை, பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர்  ஜெப்ரி அலோசியஸ் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி உட்பட குறித்த நிறுவனத்தின் 3 பணிப்பாளர்களையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம், அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தடைசெய்துள்ளது.