பதவியைக் காத்துக் கொள்ள RMV ஜகத் தாந்தீரிகம் செய்கிறார்

பதவியைக் காத்துக் கொள்ள RMV ஜகத் தாந்தீரிகம் செய்கிறார்

11 April 2019 08:57 am
பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி, தனது பதவியைக் காத்துக் கொள்வதற்காக தற்போது விகாரைகளுக்கும், கோவில்களுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளர். அத்துடன், தாந்திரீக ரீதியாகவும் சில முயற்சிகளை அவர் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு தாந்திரீக வேலைகளுக்கும், பரிகார பூஜைகளுக்கும் நாளாந்தம் லட்சக் கணக்கில் செலவிட்டு வருவதாக தெரியவருகிறது. அவருக்கு அங்கொட பிரதேசத்தில் இருக்கும் வீட்டிலும், குருணாகல் பிரதேசத்தில் இருக்கும் ஓட்டல் விடுதியிலும் இந்த பூஜைகள் நடந்து வருவதாக தெரியவருகிறது.

அத்துடன், பொரல்ல பிரதேசத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான ஓட்டல் விடுதியொன்றிலும் யாக, ஓம பூஜைகள் நடந்து வருவதாக தெரியவருகிறது. இந்த பூஜைகளில் மோட்டார் வாகன திணைக்களத்திலுள்ள அந்தந்த பிரிவு பிரதானிகளும் பங்கேற்று வருவதாக தெரியவருகிறது.