ஒரு நாள் போதைக்கு 7 லட்சம் செலவு செய்த அரச நிறுவனங்களின் தலைவர்

ஒரு நாள் போதைக்கு 7 லட்சம் செலவு செய்த அரச நிறுவனங்களின் தலைவர்

11 April 2019 10:28 am
நல்லாட்சி அரசாங்கம் அதிகாத்திற்கு வர முன்னர் எதுவுமின்றியிருந்த அரச நிறுவனங்களின் தலைவர் நான்கு வருடங்களில் கோடீஸ்வரராகியுள்ளதாக தெரியவருகிறது.

அவர் தற்போது அதிசொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவரின் உதவியுடனேயே அரச நிறுவனங்களின் தலைவர் இந்த நிலையை அடைந்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, பாதுகாப்பு சேவகன் பணியைவிட எதனையும் செய்திருக்கவில்லையெனத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், அண்மையில் குறித் அதிகாரி, சொகுசு விடுதியொன்றுக்குச் சென்று நண்பர்களுடன், குடித்து கும்மாளமடித்துள்ளார். இதற்காக ஓரிரவில் 735,000 ரூபா செலவிட்டுள்ளார்.

வருமான வரி திணைக்கள அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிய வாய்ப்பிருக்காதா?

சாதாரண பொதுமகன் ஒருவர் வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து, சில கொடுக்கல், வாங்கல்களை வங்கியூடாக செய்ய ஆரம்பித்தவுடனேயே வருமான வரி திணைக்கள அதிகாரிகள், வீடுகளுக்கு கடிதங்களை அனுப்ப ஆரம்பித்துவிடுவர்.

ஆனால் பொதுமக்களின் பணத்தில் சம்பளம் பெரும் இவ்வாறான அதிகாரிகளின் கொடுக்கல் வாங்கல்கள், வரவு செலவுகள் குறித்து வருமான வரி திணைக்கள அதிகாரிகள் ஏன் கண்டுகொள்வதில்லை என்பதே கேள்வியாக இருக்கிறது.

குறித்த இரவில் மதுபானத்திற்காக செலவிட்ட பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.