நாடாளுமன்ற சண்டிய் குறித்து சட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகர் கவனம்
Sunday, 23 Feb 2020

நாடாளுமன்ற சண்டிய் குறித்து சட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகர் கவனம்

13 April 2019 09:16 am

நாடாளுமன்ற அவைக்குள் வன்முறையில் ஈடுபட்டு, பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள எம்.பிக்கள் குறித்து நாடாளுமன்ற வரப்பிரசாத குழுவின் ஊடாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபைக்குள் நடத்த வன்முறைச் சம்பவம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆறு எம்.பிக்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த விசாரணைகளுக்கு நாடாளுமன்றம் சார்பாக எவ்வித தடையோ அழுத்தமோ இருக்காது என சபாநாயகர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வரப்பிரசாத குழு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் விசாரணைகள் வெவ்வேறாக நடக்கும் எனத் தெரிவித்த சபாநாயகர், இதற்கு முன்னரும் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த இவ்வாறே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

160 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு சென்றிருந்த சபாநாயகர் கருஜயசூரிய நேற்று முன்தினம் (11) இலங்கை திரும்பியிருந்தார். இதன்பின்னர் நாடாளுமன்ற விசாரணைகள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்ச ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றக் குழுவின் ஊடாக தீர்த்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதன்மூலம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளைத் தடுக்க முடியும் என்பதனால் மகிந்த தரப்பினர் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.