FCID உயர் அதிகாரிகள் பலர் மாற்றம்

FCID உயர் அதிகாரிகள் பலர் மாற்றம்

13 April 2019 09:44 am
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவின் (FCID) உயர் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FCID மூலம் விசாரிக்கப்பட்டு வரும் நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் குறித்த அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதால் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சேனவிரத்ன FCID பிரிவின் பிரதானியாக பொறுப்பேற்ற பின்னர், அதுவரை அந்த நிறுவனத்தில் உள்ள சில அதிகாரிகளுடன் டீல் செய்துவந்த சிலர் குழப்பமடைந்துள்ளனர். ரவி சேனவிரத்ன குறித்த பதவியில் இருப்பதால் டீல் செய்ய முடியாது என்பதே இதற்குக் காரணமாகும்.  ரவி செனவிரத்ன உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டபோதும், ''உயர் பதவிக்கு புதியவர் வந்தாலும், நாங்களே விசாரணை நடத்துகிறோம். அனைத்தையும் நாம் பார்த்துக் கொள்கிறோம்'' என்று விசாரணை அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

இதன்பின்னர், இந்த மோசடிக் காரர்களுடன் டீல் வைத்திருந்த FCID பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்ய உயர் அதிகாரி தீர்மானித்துள்ளார்.