இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!
Sunday, 23 Feb 2020

இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!

15 April 2019 01:50 pm

தற்போது இலங்கையில் மிகவும் இலாபமான வியாபாரம் திருடுவது அல்ல எனவும், அந்தத் திருடர்களைப் பிடிப்பது எனவும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

திருடர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தபோதிலும், திருடர்களைப் பிடிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். அவர்களுக்கு எதிராக எவ்வித வழக்குகளும் பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், திருடர்கள் அச்சத்துடனேயே வாழ்வதாகவும், அவர்கள் தமது திருட்டை மறைத்துக் கொள்வதற்காக, திருடப்படும் பணத்தில் குறிப்பிடத்தக்க தொகையையே செலவிட நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, எனினும், திருடர்களைப் பிடிப்பதாகக் கூறி விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு இந்த எவ்வித சிரமமோ, செலவுகளோ இல்லை எனக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் போது நடந்த விடயங்கள் தற்போது, வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும், இதன்மூலம் மிகவும் இலாபகரமான வியாபாரம் திருடர்களைப் பிடிப்பது எனவும் லங்கா நியூஸ் வெப் தளத்திற்கு தகவல் வழங்கிய அந்த அதிகாரி குறிப்பிட்டார்.