ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அரசியல் மாற்றம்?

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அரசியல் மாற்றம்?

19 April 2019 07:15 am

திருப்தி வழிபாடுகளின் பின்னர் நாடு திரும்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கியமான அரசியல் தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கக் கூடும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதித்தி ட்டம் தீட்டியமை குறித்து அல்லது மத்திய வங்கி பிணை முறி விவகாரம் குறித்து முக்கியமான சிலரை கைதுசெய்வதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்கக் கூடும் என அந்தத் தகவல்கள் கூறுகின்றன. அல்லது இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கோதாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜா உரிமை மற்றும் அவருக்கெதிரான வழக்கு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சி பூசல் ஆகிய நெருக்கடிகளினால் தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவது மைத்திரிபால சிறிசேனவிற்கு சாதகமாகஅமையும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமாக சென்ற ஜனாதிபதி திருப்திக் கோயிலுக்கும் சென்று விசேட வழிபாடுகளை நடத்தியுள்ளார். அத்துடன், இந்திய பயணத்தின் பின்னர் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதற்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.