மேலும் பல ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!
Tuesday, 26 May 2020

மேலும் பல ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!

19 April 2019 07:49 am

இலங்கையில் பொதுவாக நடைமுறையில் உள்ள தொழில்சார் சம்பிரதாயங்களுக்கமைய ''ஜனாதிபதி சட்டத்தரணி''களாக பதவியமர்த்தப்படுவர்கள் அந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களாக இருப்பார்கள். எனினும், இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ஜனாதிபதி சட்டத்தரணிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்கள் பதவியமர்த்தப்படுவதில் குறித்த சட்டத்தரணிகள் குறைந்தபட்சம் 20 வருடங்கள் சட்டத்துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அத்துடன், இலங்கை நீதி அறிக்கையாக குறிப்பிடப்படும் SLR மற்றும் புதிய நீதி அறிக்கையான NLR ஆகியவற்றில் சாதனை வழக்குகளில் குறைந்தபட்சம் ஐந்து வழக்குகளில் இந்த சட்டத்தரணிகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதும் கவனிக்கப்படும்.

எனினும், இந்த சித்திரைப் புத்தாண்டு காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சித்திரைப் புத்தாண்டு என்பதால் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மலிந்துவிட்டார்களா என்ற கேள்வி சட்டத்துறையில் உள்ள பலர் கேள்வியெழுப்புகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகள் பட்டியலில்,
 • சம்பத் மெண்டிஸ்,
  நவீன் மாபன,
  சானக டி சில்வா,
  பியசேன தீரத்ன,
  எம், ஜயசிங்க,
  நளீன் இந்திரதிஸ்ஸ,
  வீ.கே. சோக்சி,
  நளீன் திசாநாயக்க,
  மதுர குணவங்ச,
  வசந்த கஜநாயக்க,
  அஜந்த ரொட்டிகோ,
  ஃபய்மர் காசீம்,
  ஜகத் விக்மநாயக்க,
  சுமித் சேனாநாயக்க,
  சீவலி அமினிரிகல,
  கபில மனம்பெரி,
  சாலிய மோகோட்டி,
  வின்சன்ட் பெரேரா,
  சனத் வீரரத்ன,
  ஏ.ஏ.எம். இல்லியாஸ்,
  ஸ்வர்ணா பெரேரா,
  ஆகியோர் இந்தப் பட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ள சில பெயர்களைப் பார்க்கும்போது ஒரு விடயம் தெளிவாகிறது என சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பிரதேசங்களில் வழக்குகளுக்கு முன்னிலையாகும், மேல், உயர் நீதிமன்றங்களில் ஒரு வழக்கில் கூட முன்னிலையாகாத, மாவட்ட நீதிமன்றங்களில் தொழில் பிணக்குகளைத் தீர்த்து வைக்க முன்னிலையான சட்டத்தரணிகளும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.