கோதாபய தேர்தலில் போட்டியிடுவார் என்ற அச்சத்தில் வழக்கு போடுகின்றனர்
Tuesday, 26 May 2020

கோதாபய தேர்தலில் போட்டியிடுவார் என்ற அச்சத்தில் வழக்கு போடுகின்றனர்

20 April 2019 04:31 am

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோதாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்ற அச்சத்தினால் எதிர் தரப்பினர் இவ்வாறு வழக்குகளை தாக்கல் செய்வதாக மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

''மக்களுக்கு கொடுக்கக் கூடாது, சுமை, துன்பம், கஸ்டம் அனைத்தையும் இந்த அரசாங்கம் கொடுத்துள்ளது. அவர்கள் சொகுசாக இருக்கின்றனர். ஜனாதிபதி வேட்பாளராக யாரையும் இதுவரை எமது கட்சி சிபாரிசு செய்யவில்லை. எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தயார் என்பது கருத்தாக்கம். மக்களின் எதிர்பார்ப்பு, மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாகவும், கட்சியின் தலைவராக அவர் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தீர்மானங்களுடன் பணியாற்ற நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்.'' என்று அவர் தெரிவித்தார்.

நீதிமன்றம் சுயாதீனமாக செயல்படுவதாகக் கூறுகின்ற இந்த அரசாங்கம் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவர்களுக்கு இலங்கையில் வழக்குகளைத் தாக்கல் செய்து, பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியும் அல்லவா?'' என்றும் சீ.பி.ரத்நாயக்க கேள்வியெழுப்பினார்.