ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளர் ராஜித

ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளர் ராஜித

7 May 2019 02:53 am


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவையும், பிரதமர் வேட்பாளராக ராஜிதவையும் அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்குமாறு கட்சியின் முக்கியஸ்தர்கள் கோரியுள்ளனர்.

அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்த சந்தர்ப்பங்களில் ராஜித சேனாரட்ன அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றார்.

தற்பொழுது நாட்டில் சுகாதாரத்துறையே வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனை ராஜிதவே வழிநடத்தி வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ளாவிட்டால் நெருக்கடி நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.