பதுளையிலும் சஹாரியா பல்கலைக்கழகமா? நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு?
Monday, 25 May 2020

பதுளையிலும் சஹாரியா பல்கலைக்கழகமா? நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு?

9 May 2019 11:53 am

பதுளையில் இயங்கிய அல்-முஸ்தபா பல்ககைலக்கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லையென தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலையகத்தில் இன்று பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஊவா மாகாணத்தில் முற்றாக நிறுத்தப்படுவதாகவும், இந்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ் மாணவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டது குறித்து அரவிந்தகுமார் எம்.பி. பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரவித்தார்.


மழை பெய்தாலே குடை கேட்கும் அரவிந்தகுமார் எம்.பி, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து வாய்திறக்காததன் காரணம் என்ன என்றும் செந்தில் தொண்டமான் கேள்வியெழுப்பினார்.


இதேவேளை, பதுளையில் இயங்கிய அல் முஸ்தபா பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் பெறப்படவில்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதேவேளை, குறித்த பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வி அமைச்சினாலும் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று அல்ல என்றும் உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரமின்றி வழங்கப்படும் எந்தவொரு பல்கலைக்கழக பட்டப்படிப்பும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது.