பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை
Monday, 25 May 2020

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

9 May 2019 03:36 pm


கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.


அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை தவிர்க்க முடியாமை குறித்தே இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.


வேண்டுமென்றே கடமையை உதாசீனம் செய்தார் என பூஜித் ஜயசுந்தர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு பொலிஸ் மா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.


எனினும், இந்த கோரிக்கையை பொலிஸ் மா அதிபர் நிராகரித்த காரணத்தினால் அவரை ஜனாதிபதி கட்டாய விடுமுறையில் அனுப்பி வைத்தார்.


கடமையை உதாசீனம் செய்தல், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.