பியல் நிசாந்தவை காப்பாற்றியது யார்
Monday, 25 May 2020

பியல் நிசாந்தவை காப்பாற்றியது யார்

14 May 2019 03:49 am

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 11 படைவீரர்கள் கொல்லப்பட்டதாக பொய்யான தகவலை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்தவை அதிகாரிகள் கைது செய்யப்படாமைக்கு அரசியல் பிரபலம் ஒருவரே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பியல் நிசாந்தவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்யத் திட்டமிட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் பிரபலம் ஒருவர் அவரை கைது செய்ய வேண்டாம் என புலனாய்வுப் பிரிவினருக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்.

அரசாங்கத்தின் முக்கியஸ்தராக கடமையாற்றி வரும் குறித்த நபர், பியல் நிசாந்தவை கைது செய்ய வேண்டாம் என காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த அரசியல்வாதியின் அழுத்தங்கள் காரணமாக கடந்த அரசாங்கத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.