மினுவன்கொட வன்முறைகளின் பின்னணியில் மதுமாதவ?

மினுவன்கொட வன்முறைகளின் பின்னணியில் மதுமாதவ?

14 May 2019 03:54 am


மினுவன்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பிரபல பாடகரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உறுப்பினருமான மதுமாதவ அரவிந்த இருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற போது மதுமாதவ அந்தப் பகுதியில் இருந்தமை குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மதுமாதவ அந்தப் பகுதியில் சிறு கூட்டங்கள் சிலவற்றை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பௌத்தர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினர் முஸ்லிம்களின் கடைகள் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை இலக்கு வைத்து இந்த வன்முறைகளை சில அரசியல்வாதிகள் கட்டவிழ்த்துவிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.