சம்பிக்க அரசாங்கத்தை விட்டு விலகுகின்றாரா?
Monday, 25 May 2020

சம்பிக்க அரசாங்கத்தை விட்டு விலகுகின்றாரா?

14 May 2019 04:01 am


பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய வகிபாகத்தை வழங்கிய சம்பிக்க, ஒக்ரோபர் புரட்சியின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு அயராது உழைத்திருந்தார்.

எனினும் அண்மைய நாட்களில் அரசியல் ரீதியாக உதாசீனப்படுத்தப்பட்டமை கருத்து முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால், விரக்தியுடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுஷகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமருடன் இது குறித்து பேசிய போதிலும் உரிய தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்துள்ள சம்பிக்க ரணவக்க விரைவில் அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பதனை தீர்மானிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.