சேவைக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக கடும் போட்டி
Monday, 25 May 2020

சேவைக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக கடும் போட்டி

15 May 2019 10:31 am

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு இன்னமும் பலப்படுத்தப்படவில்லை என்பதே இதன் ஊடாக புலனாகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொதுவாக அரசியல் தலைவர்கள் அனைவரின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் லாபமீட்ட முயற்சிக்கும் தரப்பினர் மீது மக்கள் வெறுப்புணர்ச்சி கொண்டுள்ளனர்.

மேலும் சிலர் தங்களது சுயலாப நோக்கங்களின் அடிப்படையில் சில காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

பாதகாப்புப் படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, விமானப்படைத் தளபதி கபில ஜயம்பதி மற்றும் கடற்படைத் தளபதி பியல் டி சில்வா ஆகியோர் தற்பொழுது சேவை நீடிப்பு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு சேவை நீடிப்பு வழங்காவிட்டால் அவர்கள் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த அனைத்து படைத் தளபதிகளும் தங்களது பதவிகளை பாதுகாத்துக்கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.