லசந்த கொலையுடன் தொடர்புடைய மேஜர் புலவத்த மீண்டும் கடமையில்
Monday, 25 May 2020

லசந்த கொலையுடன் தொடர்புடைய மேஜர் புலவத்த மீண்டும் கடமையில்

15 May 2019 04:06 pm


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய மேஜர் புலவத்த மீண்டும் கடமையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

லசந்த கொலையை மேஜர் புலவத்த வழிநடத்தியதாக புலத்வத்தே வலவ்வே திஸாநாயக்க முதியன்சே ராலமிகே பிரபாத் சீவலி பண்டாரநாயக்க புலவத்தகே என்னும் அதிகாரிரய இராணுவத் தளபதி மீளவும் கடமையில் இணைத்துக் கொண்டுள்ளார்.

மருதானை ட்ரிபோலி இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய மேஜர் புலவத்தகேயின் கீழ் இயங்கிய குழவினர் தி நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயரை தாக்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கீத் நொயா கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மேஜர் புலவத்தகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வாறு மீளவும் பணி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.