சபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ - Lanka News Web (LNW)

சபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்த பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பாராளுமன்றத்தை சபாநாயகர் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

மீண்டும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்காக பாராளுமன்றம் கூடும் என, சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், காமினி லெக்குகே மற்றும் மரிக்கார் ஆகியோருக்கிடையில் சண்டை இடம்பெற்றுள்ள நிலையில், மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே. இதையடுத்து காமினி லொக்குகேயின் இருப்பிடத்திற்குச் சென்ற மரிக்கார், காமினி லொக்குகே மீது அடித்து விட்டு பின்கதவால் வெளியேறியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் இடம்பெற்ற மோதலை விலக்குப்பிடித்துக்கொண்டிருந்த காவிந்து ஜெயவர்தன திடீர் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

மே 19, 2019

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்…

மே 19, 2019

இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே,…

மே 19, 2019

எமி ஜாக்சன் photo Gallery

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை - மஹிந்த

மே 19, 2019

இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது போர்க் குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை...

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு

மே 19, 2019

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்...

இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை

மே 19, 2019

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா...

எமி ஜாக்சன் photo Gallery

மே 19, 2019

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb