ஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)

ஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)

21 March 2018 03:47 am

நிதஹாஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் இறுதி பந்தில் சிக்சர் அடித்து அரங்கையும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் பிரமிக்க வைத்த தினேஷ் கார்த்திக் இறுதிப் பந்தை எதிர்கொண்ட அந்த நொடிகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தமிழர்கள் மிளிர்வதும், அவர்கள் ஊடகங்களில் தமிழில் பேசுவதும் கேட்கவும் பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மைதானத்திலும் சங்கர் மற்றும் சுந்தர் ஆகியோருடன் தமிழில் பேசிய தனக்கு பழக்கம் என்று தினேஷ் கார்த்திக் அழகுத் தமிழில் கூறினார்.