அதிகாரப் பகிர்வை உருவாக்க எம்மால் முடியாதுள்ளது: சம்பந்தன்

இதுவரை நம்பகரமான அதிகாரப்பகிர்வை உருவாக்க எங்களால் முடியாதுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றைய (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டினைப் பிரிக்காது இணைந்து ஐக்கியமாக நாட்டினை வழிநடத்திச் செல்ல வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. இந்நிலையில் எமக்கான ஓர் உண்மையானதும் நம்பகமானதுமான அதிகாரப் பகிர்வை இதுவரை நாம் உருவாக்கவில்லை.

மேலும் மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் எமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. எனவே எமது நகர்வுகள் அரசியலமைப்பு உருவாக்கத்தினை நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்படாமை எமக்கு கவலையளிக்கின்றது. எனவே மாகாணசபை தேர்தலை இனியும் தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

பொதுஜன பெரமுன ஊடாக அரசியலுக்கு வரும் பிலி கமகே

ஜூலை 21, 2018

பசில் ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றிய கலாநிதி பிலி...

கைது செய்வதை தடுக்க கதிர்காமக் கந்தனை நாடும் படை பிரதானி!

ஜூலை 21, 2018

கடந்த ஆட்சி காலத்தில் கொலை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பு வழங்கியமை...

மாகாண சபைத் தேர்தல் ஜனவரி 5இல்?

ஜூலை 21, 2018

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி...

கொழும்பின் பல பகுதிகளுக்கு வரும் 27ஆம் திகதி மின்விநியோக தடை

ஜூலை 21, 2018

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி...

Connect with Us

fb twitter youtube g ins in

பிரபலமான செய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்! அருட்தந்தை சக்திவேல்

ஜூலை 18, 2018

நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின்...

கோதாபயவும் திருடரைப் பாதுகாத்துள்ளார் : அஜித் பிரசன்ன

ஜூலை 15, 2018

கோதாபய ராஜபக்சவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வரும்...

ஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்

ஜூலை 21, 2018

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

ஜூலை 19, 2018

தென் அமெரிக்க நாடான பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.