உறவுகளைத்தேடி 500ஆவது நாளை எட்டும் போராட்டம்

காணாமற் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டுத் தர வலியிறுத்தி வவுனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) ஐந்நூறாவது தினத்தை எட்டவுள்ளது.

இதனை முன்னிட்டு நாளை யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இவ் உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது நல்லூர்க் கந்தன் ஆலய மதிய நேர பூஜையின் போது 108 தேங்காய் உடைத்து 50 தீச்சட்டிகளும் எடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமற் போனவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தில் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற போராட்டம் கடந்த வாரம் 500 நாளை எட்டியிருந்தது.

வவுனியா காணாமற்போனோர் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழில் இடம்பெறவுள்ள போராட்டத்திலும், ஆலய வழிபாடுகளிலும், அரசியல்வாதிகள், சமூகத்தில் அக்கறையுள்ள அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் மற்றுமொரு அத்தியாயம்

ஜூலை 22, 2018

மொரகஹகந்தையை அண்மித்து உள்ள களு கங்கயை மறித்து நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நீர்த்தேக்கத்தின் நீரும்...

களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பல் விழா நாளை ஜனாதிபதி தலைமையில்

ஜூலை 22, 2018

21ஆம் நூற்றாண்டில் எமது நாட்டின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த - களுகங்கை...

திடீரென மஹிந்தவிற்கு வந்த கவலை!

ஜூலை 22, 2018

சரியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும்...

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது!

ஜூலை 22, 2018

மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...

Connect with Us

fb twitter youtube g ins in

பிரபலமான செய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்! அருட்தந்தை சக்திவேல்

ஜூலை 18, 2018

நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின்...

கோதாபயவும் திருடரைப் பாதுகாத்துள்ளார் : அஜித் பிரசன்ன

ஜூலை 15, 2018

கோதாபய ராஜபக்சவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வரும்...

ஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்

ஜூலை 21, 2018

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

ஜூலை 19, 2018

தென் அமெரிக்க நாடான பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.