வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் : சபாநாயகர்

வடக்கின் பாதுகாப்பு காரணமாக அங்கு சட்டம் நிலை நாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

வடக்கில் நேற்று பகிரங்கமாக கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் அப்பகுதியில் சில குழுக்கள் இணைந்து அசம்பாவித செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் யாழில் வைத்து இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறுகின்றார். இந்த சமயத்தில் அங்குள்ள இராணுவத்தினரால், பொலிஸாரால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றது என விமல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ‘வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் கருத்துக் கூறுவார், அங்கு சட்டம் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் மற்றுமொரு அத்தியாயம்

ஜூலை 22, 2018

மொரகஹகந்தையை அண்மித்து உள்ள களு கங்கயை மறித்து நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நீர்த்தேக்கத்தின் நீரும்...

களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பல் விழா நாளை ஜனாதிபதி தலைமையில்

ஜூலை 22, 2018

21ஆம் நூற்றாண்டில் எமது நாட்டின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த - களுகங்கை...

திடீரென மஹிந்தவிற்கு வந்த கவலை!

ஜூலை 22, 2018

சரியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும்...

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது!

ஜூலை 22, 2018

மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...

Connect with Us

fb twitter youtube g ins in

பிரபலமான செய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்! அருட்தந்தை சக்திவேல்

ஜூலை 18, 2018

நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின்...

கோதாபயவும் திருடரைப் பாதுகாத்துள்ளார் : அஜித் பிரசன்ன

ஜூலை 15, 2018

கோதாபய ராஜபக்சவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வரும்...

ஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்

ஜூலை 21, 2018

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

ஜூலை 19, 2018

தென் அமெரிக்க நாடான பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.