நாடு முழுவதும் 12 கிளை அலுவலகங்கள் - Lanka News Web (LNW)

நாடு முழுவதும் 12 கிளை அலுவலகங்கள்

தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பான 13,000 கோப்புகளை முன்னைய தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சு வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்த ஆவணங்களை அலுவலகம் கோரியதை தொடர்ந்து பல கிராமசேவையாளர்கள் தங்களிடமிருந்த கோப்புகளை அமைச்சிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சிடமிருந்து 13,000 கோப்புகள் கிடைத்துள்ளன,இந்த கோப்புகளில் உள்ள விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம், என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் குறிப்பிட்ட கோப்பில் உள்ள சம்பவங்கள் குறித்து ஏற்கனவே நாங்களும் ஆராய்ந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 12 பிராந்திய அலுவலகங்களை அமைக்க எண்ணியுள்ளதாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

12 பிராந்தியங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் இதில் 5 அலுவலகங்கள் வடக்கிலும் 3 அலுவலகங்கள் கிழக்கிலும் அமையவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எங்கள் விசாரணைகளை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் 1970 களில் சைப்பிரசில் 4000 பேர் காணாமல்போனார்கள் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக 1990களில் அலுவலகமும் அமைக்கப்பட்டது இந்த விசாரணைகள் இன்று வரை தொடர்கின்றன என தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் விசாரணைகளும் நீண்ட காலம் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஜனாதிபதியும் அவரை நம்பிய எம்பிக்களும் நடுத்தெருவில் - மனுஷ

நவம்பர் 20, 2018

போக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை...

ஐதேக தொடர் போராட்டத்திற்குத் தயார்

நவம்பர் 20, 2018

ஐக்கிய ​தேசியக் கட்சி தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத்...

சிங்கப்பூர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட மாட்டாது - பந்துல அறிவிப்பு

நவம்பர் 20, 2018

எக்காரணம் கொண்டும் இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரத்துச்...

படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்!

நவம்பர் 20, 2018

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

மைத்திரிக்கு பெரிய ஆப்பு! மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம!

நவம்பர் 20, 2018

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு...

படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்!

நவம்பர் 20, 2018

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...

குரல் மூலம் தீர்ப்பு அளித்த சபாநாயகரின் முடிவு சரியானதே! சமல் ராஜபக்ஷ இதற்கு உதாரணம்!  

நவம்பர் 17, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கப்போவதில்லை என்று...

சிறுபான்மைக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி அவசர பேச்சு

நவம்பர் 14, 2018

ஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக...