நாட்டில் காட்டுச் சட்டமே இருக்கிறது என்கிறார் விமல் - Lanka News Web (LNW)

நாட்டில் காட்டுச் சட்டமே இருக்கிறது என்கிறார் விமல்

அரசாங்கம், அரசியல்வாதிகளின் போர்வையில், பாதாள குழுவினரைக் கொலை செய்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச, போரை முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாது பாதாள உலகக் குழுவினரையும் முடக்கியிருந்ததாக விமல் வீரவங்ச இதன்போது தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுவினரை முடக்கியமை குறித்து பேசுகின்ற விமல் வீரவங்சவிற்கு அந்த பாதாள உலகக் குழுவினர் எவ்வாறு உருவாகியது? அவர்களுக்கு யார் பாதுகாப்பளித்தது என்பவை மறந்துபோயுள்ளது.

தெற்கில் அந்நாட்களில் மகிந்த தரப்பினரால் பாதாள குழுக்கள் போஷிக்கப்பட்டன. மகிந்த தரப்பினரால் பாதுகாப்பளிக்கப்பட்டது. தேர்தல் காலங்களில் மகிந்தவிற்கு எதிரான அரசியல் குழுக்களை அடக்கிய ராஜபக்ச குழுவினர், இந்த பாதாள உலகக் குழுக்களைப் பாதுகாத்து வந்ததை விமல் வீரவங்ச மறந்துவிட்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சண்டி மல்லியின் செயற்பாடுகள் என்ன என்பது குறித்து புதிதாக நாம் சுட்டிக்காட்டத் தேவையில்லை. இறுதியில் ராஜபக்சவிற்காக அந்த நபர் உயிர் தியாகம் செய்திருந்ததையும் யாரும் மறுப்பதிற்கில்லை.

இந்த நிலையில், நாட்டில் தற்போது காட்டுச் சட்டம் இருப்பதாகவும், பாதாள உலகக் குழுவினரை காட்டுச் சட்டத்தில் ஒடுக்குவதாகவும் விமல் வீரவங்க தெரிவித்துள்ளமை நகைப்பிற்குரியதாகும்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

போலிக் கடவுச்சீட்டுக்களுடன் பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு

பிப்ரவரி 18, 2019

வடகொரியா அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை...

கொழும்பில் ஒரு வழிப் போக்குவரத்து

பிப்ரவரி 18, 2019

கிங்ஸ்லி வீதி சுற்றுவட்டத்திலிருந்து கேரி வித்தியாலயம் சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒரு வழிப்...

ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

பிப்ரவரி 18, 2019

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவிற்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா

பிப்ரவரி 14, 2019

அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

மாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...!

பிப்ரவரி 12, 2019

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

பிப்ரவரி 12, 2019

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் மருதமுனை மேட்டுவட்டை 65M வீட்டுத்திட்டத்தில் 178 வீடுகள்...

அரசியலுக்கு தயாராகும் விஜய் அண்டனி

பிப்ரவரி 12, 2019

தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை தருகிறார் விஜய் அண்டனி