அதிகாரத்தை குறிவைக்காது, மக்களின் பிரச்சினைத் தீர்க்க வேண்டும். - Lanka News Web (LNW)

அதிகாரத்தை குறிவைக்காது, மக்களின் பிரச்சினைத் தீர்க்க வேண்டும்.

அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவது என்பதில் மட்டும் குறிவைக்காது, மக்களின் பிரச்சினைத் தீர்க்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைத் தீர்க்க ஆட்சியாளர்கள் முன்வரவில்லையெனில், கடந்த கால தேர்தலையைப் பார்க்க, மோசமான முடிவுகளை மக்கள் வழங்குவர் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மாத்தறையில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நேற்று (07) அவர் இதனைத் தெரிவித்தார்.

''ஆட்சியாளர்களே பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும். மக்களின் பிரச்சினையை இவர்கள் தீர்க்க முயற்படவில்லை. பதவிகளில் உள்ளவர்கள் தத்தமது அணிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவே முற்படுகின்றனர். கூட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சிக்கிறது. தமக்கும், பிரதமர் தரப்பினருக்கும் தேவையான நபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதே மைத்திரி அணியின் தேவையாக இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஆட்சியிலும், பதவியிலும் இருப்பவர்கள் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதிலேயே அக்கறை கொண்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளுமாறு நாம் கூறுகிறோம். மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாடு இன்று பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நெருக்கடிகளைக் கவனத்தில் கொள்ளாது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பேசுகின்றனர். எனினும், ஆட்சியாளர்கள் இவ்வாறு பயணிப்பதை அனுமதிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காவிடின், கடந்த தேர்தல்களில் கிடைத்த முடிவுகளைப் பார்க்க மோசமான முடிவுகளை மக்கள் வழங்குவர். கூட்டு எதிர்க்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கிறது. எனவே, மைத்திரி, மகிந்த ஆகியோர் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை குடும்பத்திற்குள்ளே தீர்த்துக் கொள்ள கூட்டு எதிர்க்கட்சிக்குத் தெரிந்திருக்க வேண்டும். எனினும், இதனை நாட்டு மக்களின் பிரச்சினையாக இதனை தோற்றுவிக்கும் தேவை இல்லை.''

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நேவி சம்பத்தை CID கைது செய்தது

ஆகஸ்ட் 14, 2018

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால்...

இந்தியாவில் இருந்து கரையொதுங்கும் குப்பைகள் : தொடவேண்டாம் என அறிவுறுத்தல்

ஆகஸ்ட் 14, 2018

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை...

மஹிந்தவை விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு

ஆகஸ்ட் 14, 2018

எதிர்வரும் வௌ்ளிக்கிமை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

வட மாகாண அமைச்சு கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும்

ஆகஸ்ட் 14, 2018

வடமாகாண அமை ச்சர்கள் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என வடமாகாண...

Connect with Us

fb twitter youtube g ins in

obt web inside

பிரபலமான செய்திகள்

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!

ஆகஸ்ட் 13, 2018

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக உருவாக்கப்பட்டு பாராளுமன்ற...

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி

ஆகஸ்ட் 14, 2018

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்...

உலக சமாதான ஓட்டத்தில் கின்னஸ் சாதனை வீரர் சுரேஷ் ஜோக்கின் இன்று கல்கரியில்

ஆகஸ்ட் 14, 2018

கனடாவில் நடக்கும் உலக சமாதான ஓட்டத்தில் கின்னஸ் சாதனை வீரர் சுரேஷ் ஜோக்கின்...

மலசலகூடத்தில் இருந்து பசில் ராஜபக்ஷசை சந்திக்க நேரம் கேட்ட ரயில்வே தொழிற்சங்க முக்கியஸ்தர்!

ஆகஸ்ட் 10, 2018

சம்பள உயர்வை நோக்காகக் கொண்டு கடந்த 8ம் திகதி மாலை 3.00 மணி...