நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழ் இறக்கம் : 23 பேர் இடம்பெயர்ந்தனர்

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழ் இறக்கம் : 23 பேர் இடம்பெயர்ந்தனர்

10 October 2018 03:25 am

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நிலம் தாழ் இறங்கி உள்ளோடு நிவ்வெளிகம பகுதியில் உள்ள ஜந்து குடும்பங்களைச் சேர்ந்த 23பேர் இடம்பெயர்ந்து உறவினர்களின் விடுகளில் தங்கவைக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள ஜந்து குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் காணப்பட்டுள்ளது. நிவ்வெளிகம பகுதியில் உள்ள மலைஉச்சியில் உள்ள கற்பறைகள் சரிந்து வரும் அபாயம் நிலவுகிறது. காசல்ரீ நீர்தேக்கத்தில் அருகாமையிலே இந்த குடியிருப்பகள் காணப்படுகின்றன. அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழ் இறங்கியுள்ளது. இதனால் குறித்த வீதியின் ஊடாக சாரதிகள் அவதானமாக போக்குவரத்தில் ஈடுபட வேண்டும்” என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

hatton 09

நிலம் தாழ் இறங்கியதால் பாதிக்கபட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கபட்டுள்ளனர். இது தொடர்பில் தேசிய முகாமைதுவ அறிக்கையை பெற்று கொள்ள நோர்வூட் பொலிஸார் ஊடாக குறித்த பிரதேசத்தை பரீசிலனை செய்வதற்காக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

hatton 01

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறித்த கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேந செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிவாரன பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15hatton 15