ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கோட்டா

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கோட்டா

10 October 2018 03:42 am

அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவேண்டுமென தாம் விரும்புவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இறுதிமுடிவை எடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தாம் நினைக்கவில்லை எனவும் கோட்டா கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று பேசியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.