புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க - Lanka News Web (LNW)

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான திட்டத்தை அரசாங்கம் எனும் ரீதியில் நாம் வகுத்து வருகிறோம்.

அதற்கிணங்க, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடமும் நாம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். அவர்களும் இதற்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பம் தெரிவிக்கும் புலம்பெயர் தமிழர்கள், புலிகளுடன் தொடர்புடையவர்களா – இல்லையா என்பது குறித்து மத்திய வங்கி ஊடாக ஆராயப்படும்.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கு வாகனங்கள், தொலைப்பேசிகளை கடந்த காலங்களில் விற்றவர்கள், அவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க பணம் வழங்கியவர்கள் எல்லாம் கொழும்பில் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்தத் தருணத்தில் இதற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதில் எந்தப்பயனும் இல்லை.

இலங்கையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். தமிழ் – சிங்கள பேதங்களை மறந்து, நாம் இந்த விடயத்தில் செயற்பட வேண்டும்.

மேலும், அவர்கள் இடையூறுகள் இன்றி முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எனும் வகையில், இன்னும் நாம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அத்தோடு, பொருளாதார கொள்கையைப் பொறுத்தவரை கடந்த அரசாங்கம் மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கத்திலும் நிறையக் குறைகள் காணப்படுகின்றன. இவற்றையும் நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை!!

டிசம்பர் 18, 2018

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா?...

மைத்திரிக்கு அந்தத் தகுதி இல்லை!

டிசம்பர் 18, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று...

இலங்கைக்கு வாழ்த்துக் கூறியது சீனா!

டிசம்பர் 18, 2018

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஐதேக முழு ஆதரவு

டிசம்பர் 18, 2018

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்குவது தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

ரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்!

டிசம்பர் 12, 2018

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

ரணில் இன்று மாலை பிரதமராகிறார்?

டிசம்பர் 14, 2018

நேற்று (13) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில்...

ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை என்று மைத்திரி கூறியதாக வௌியாகும் செய்தி பொய்!

டிசம்பர் 13, 2018

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஐதேமு அரசாங்கத்தில் ஶ்ரீசுக எம்பிக்கள்!

டிசம்பர் 15, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில்...