வடக்கில் புத்தர் சிலைகளை சேப்படுத்தவது தெற்கு மக்களே : விஜயதாச ராஜபக்ச

வடக்கில் புத்தர் சிலைகளை சேப்படுத்தவது தெற்கு மக்களே : விஜயதாச ராஜபக்ச

10 October 2018 02:37 pm

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்துவது தெற்கு மக்கள் என உயர்கல்வி, கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல் பொருள் அழிப்பு இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சரவை விளக்கநேரத்தின்போது அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ வடக்கு , கிழக்கில் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறி இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். நாடு முழுவதிலும் கடந்த இரண்டரை வருடங்களில் தொல்பொருள் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 671 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தொல்பொருள் திருட்டு தொடர்பாக 36 சம்பவங்களும் , தொல்பொருள் அழிப்பு தொடர்பாக 75 சம்பவங்களும் , சட்டவிரோத புதையல் தோண்டுதல்கள் தொடர்பாக 505 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதிகமான சம்பவங்கள்
வடக்கில் கிழக்கில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலேயே அங்கு அதிகமான தொல்பொருள் அழிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொல்பொருள் அழிப்பு , திருட்டு, சட்டவிரோதமாக தோண்டியெடுத்தல் போன்ற சம்பவங்கள் அநுராதபுரத்திலேயே அதிகம் பதிவாகியுள்ளன. யாழ்.மாவட்டத்தில் மட்டுமே ஒரேயொரு முறைப்பாடு பதிவாகியுள்ளது.