மைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த

மைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த

10 October 2018 02:47 pm

அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மகிந்த ராஜபக்ச நிராகரிக்கவில்லை.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வீட்டில் நேற்றிரவு (9) நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியே வந்த மகிந்த ராஜபக்ச செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இதன்போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் நோக்கம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பே என்பதுடன், இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாக மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

பொதுஜன முன்னணியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பேசப்பட்டதுடன், அரசாங்கத்தைக் கவிழ்ப்பது குறித்தும் பேசப்பட்டதாக மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவத்தார்.