கொன்றது கருணா! அடித்தது டக்ளஸ்! ஐதேகவுடன் கூட்டு ஆட்சி இல்லை - சுமந்திரன்
Wednesday, 27 May 2020

கொன்றது கருணா! அடித்தது டக்ளஸ்! ஐதேகவுடன் கூட்டு ஆட்சி இல்லை - சுமந்திரன்

30 November 2018 07:08 am

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூறியுள்ளார்.

நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையிலேயே தமது அண்மைக்காலச் செயற்பாடுகள் அமைவதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று பாராளுமன்றில் மும்மொழிகளிலும் உரையாற்றி மேலும் தெரிவிக்கையில்,

“அரசியலமைப்பு ஊடாகவே எந்தவொரு நியாயமான தீர்வும் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டும். அரசியலமைப்பு மீறப்படுவதை அனுமதித்தால் அது எங்களுக்கு அரசியல் தீர்வு கிடைப்பதையும் பாதிக்கும். நாங்கள் முதலில் குரல் கொடுத்தபடியால் தான் இன்று பாராளுமன்றமே இயங்குகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசமைக்க நாங்கள் ஆதரவளிக்கவில்லை. இன்றைய நிலையில் நாட்டில் தோன்றியுள்ல குழப்ப நிலை மாறுவதற்காகவே ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் முடிவெடுத்தோம்.” என்றார்.

இதேவேளை, மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இருந்த பொலிசார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையின் பின்னணியில் கருணா இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் ஜக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டாரவும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இந்த பொலிசார் இருவர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் இருவரே அவ்வாறு உயிரிழந்துளளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பொலிசார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையின் பின்னணியில் கருணா இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் ஜக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டாரவும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

அண்மையில் கருணாவின் டுவிட்டர் தகவல் ஒன்றை சுட்டிக்காட்டி நளின் பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அவரை மிரட்டுவதாகவும் மட்டக்களப்பில் வந்து 2004ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த கருணா யார் என்பதை கேட்டுப் பார்க்குமாறும் கருணாவுடன் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் புதிய அமைச்சு பதவி எடுத்துள்ள ஒருவர் கட்சி ஆதரவாளர்கள் மீது அவரது படைகளை வைத்து தாக்குதல் நடத்தி 'நான் திரும்பி வந்துட்டேன்' என்று சினிமா வசனம் பேசியுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.