இந்திய கல்விக் கண்காட்சி - 2019

இந்திய கல்விக் கண்காட்சி - 2019

9 February 2019 07:11 am

இந்திய தூதுரகம் மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் 'இந்திய கல்விக் கண்காட்சி - 2019' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்றையதினம் இந்த கண்காட்சி  திறந்து வைக்கப்பட்டது.
 
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது. 
 
இக்கண்காட்சி தொடர்ச்சியாக இன்று  காலை 9.00 மணி முதல் 6.00மணி வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
rauf hakeem 4
rauf hakeem 5