சங்க-விரு சோபித தேரர் மாதிரி கிராமம் மக்களிடம் கையளிப்பு

சங்க-விரு சோபித தேரர் மாதிரி கிராமம் மக்களிடம் கையளிப்பு

11 February 2019 06:14 am

மாதிரிக் கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 162 ஆவது கிராமமான "சங்க-விரு சோபித தேரர்" மாதிரி கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் ஞாபகார்த்தமாக பாதுக்க மாதுலுவாவே பிரதேசத்தில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்களிப்புடன் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்தக் கிராமம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

இந்தக் கிராமத்தில் 18 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதுடன்,மின்சாரம், உள்ளக வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.